எஸ்.ஐ. நவநீத கிருஷ்ணனுக்கு வீரதீரத்துக்கான அண்ணா பதக்கம்- ஏன்?

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on

ராமநாதபுரம் மாவட்டச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதி கிருஷ்ணனுக்கு வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம், கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளைக் கைதுசெய்யும் பணியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கே.நவநீத கிருஷ்ணன் அந்த குற்றவாளிகளால் கடுமையாக தாக்கப்பட்டார். அதில் அவரின் இடப்பக்க தொடையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

ஆனாலும் சற்றும் தளர்வில்லாமல் துணிவாக இரண்டு எதிரிகளையும் கைதுசெய்ய உதவியாக இருந்துள்ளார். இந்தத் தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின்  உயிரைக் காப்பாற்றவும் மிகவும் உதவியாக இருந்துள்ளார்.

இதைக் கருத்தில்கொண்டு, கே.நவநீத கிருஷ்ணனின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான ’தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம்’ வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.                                                                                                                                        தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com