அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியர் குத்திக் கொலை!

tanjore teacher murdered
தஞ்சையில் பெண் ஆசிரியர் குத்திக்கொலை
Published on

அரசுப் பள்ளி ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பெண் ஆசிரியர் இன்று காலையில் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. 

இப்பள்ளியில் தமிழ் ஆசிரியரான 26 வயது இரமணி என்பவர், இன்று காலையில் பள்ளியில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குள் திடீரெனப் புகுந்த மதன்குமார் எனும் இளைஞர் அவரைக் கத்தியால் குத்தினார்.

அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் படுகாயமடைந்த இரமணியை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கொலைசெய்த இளைஞனுக்கும் ஆசிரியருக்கும் திருமணம் நடைபெற இருந்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்னையால் அவன் வெறிகொண்டு கொலையில் ஈடுபட்டுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com