தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி ராஜினாமா ஏன்? – குஷ்பு விளக்கம்!

குஷ்பு
குஷ்பு
Published on

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, தி.மு.க-வில் இணைந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் அதிலிருந்து விலகி காங்கிஸ் கட்சிக்கு சென்றார். அதன்பிறகு காங்கிரஸிலிருந்து விலகி 2020ஆம் ஆண்டு இறுதியில் பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பா.ஜ.க அரசு அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கியது.

இந்த நிலாஇயில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக குஷ்பு நேற்று அறிவித்திருந்தார். அவரின் ராஜினாமாவை குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

தன் ராஜினாமா குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் குஷ்பு, “அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, இன்று ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.க-வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிகள்.

என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ.க உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன்.

தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com