விக்கிரவாண்டியில் யார் கை ஓங்கியிருக்கு...? வெளியான சர்வே முடிவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
Published on

மும்முனை போட்டி நிலவும் விக்கிரவாண்டியை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வும் நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மறுநாள் வாக்குப் பதிவும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ள நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்பை சென்னையை மைய்யமாகக் கொண்டு செயல்படும் மக்கள் ஆய்வகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 56.6 % பேர் தி.மு.க.விற்கும், 37.3% பேர் பா.ம.க.விற்கும், 4.0% பேர் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பதால், அந்த கட்சியின் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் பா.ம.க.விற்கே விழும் என்று கூறப்படுகிறது. அதாவது, அ.தி.மு.க.வின் 52.2% வாக்குகள் பா.ம.க.விற்கும், 37.3% வாக்குகள் தி.மு.க.விற்கும், 6% வாக்குகள் நாம் தமிழருக்கும் விழும் என்கிறது அந்த கருத்துக் கணிப்பு.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு கணிசமாக பா.ம.க.விற்கும், பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு தி.மு.க.வுக்கும் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த கருத்து கணிப்பில் கவனிக்க வைக்கும் தகவல், ஆண்களின் அதிக வாக்குகள் பாமகவிற்கும் பெண்களின் வாக்குகள் திமுகவிற்கும் விழும் என்று கூறப்படுகிறது.

இந்த கருத்துக் கணிப்பு, தி.மு.க. – பா.ம.க. இடையே கடுமையான போட்டி நிலவினாலும், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவே வெற்றிபெறுவார் என்கிறது.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்று பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் மு.க. ஸ்டாலினே மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் விக்கிரவாண்டி மக்கள் கூறியுள்ளனர்.

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர : Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com