தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆறு
Published on

அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

”கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதிகப்படியான நீரினை வெளியேற்றுவதில் ஏற்படும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணை அணைகளின் நீரினை, இன்று காலை 09.30 மணிக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து 3000 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து 1000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் கூடுதலாக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, தாமிரபரணி ஆறு மற்றும் இதர ஆறுகளின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என்றும், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com