2026-இல் விஜய்தான் முதலமைச்சர்! – புஸ்ஸி ஆனந்த்

Vijay - Bussy Anand
விஜய் - புஸ்ஸி ஆனந்த்
Published on

“2026இல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தவெக மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய த.வெ.க கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் தவெக-வின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எங்குப் பார்த்தாலும் பெண்கள் வரவேற்புக் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

நம்முடைய இலக்கு 2026 தான். 2026இல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்" என்று பேசியிருக்கிறார். அடுத்த மாதம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com