விக்கிரவாண்டியில் நடந்துமுடிந்த தமிழக வெற்றிக் கழகத் தொடக்க மாநாடு முடிந்தபின்னர் அதன் தலைவர் விஜய் தன் கட்சியினருக்கான கடித வடிவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், குறைந்த கால இடைவெளியில் அடைமழை குறுக்கிட்ட நிலையிலும் மாநாட்டை வெற்றிபெறச் செய்ததற்காக அனைவருக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.
நான்கு பக்கங்கள் நீளும் அந்த அறிக்கையில், ”நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில்கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்துசெல்லப் பழகிக்கொள்வோம்.” என்றும்,
”எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையில் எடுப்ப்போம். 2026இல் இலக்கை அடைவோம்.” என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.