‘விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் பதவி’ – பிரேமலதா அறிவிப்பு!

செய்தியாளர் சந்திப்பு பிரேமலதா விஜயகாந்த்
செய்தியாளர் சந்திப்பு பிரேமலதா விஜயகாந்த்
Published on

“விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி தர வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை வருகிறது; இதுகுறித்து பொதுக்குழு, செயற்குழுவில் அறிவிக்க இருக்கின்றோம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். விஜய பிரபாகரன் மட்டும் இல்லாமல் பல்வேறு நபர்களுக்கு செயற்குழு கூட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதே துவங்கிவிட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று முதல் பணிகளை தொடங்கி இருக்கிறோம். அதிமுகவுடன் நாங்கள் நட்புறவுடன் தொடர்கிறோம்.

மாநாடு நடத்திய பிறகு விஜய் பொது வெளியில் யாரையும் சந்திக்கவில்லை. விஜய்யை சந்திக்க வைத்து செய்தியாளர்களான நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். விஜய்யின் கட்சி கொள்கை, கூட்டணி வியூகங்கள் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய் சவடால் விட்டு கொண்டு, அதிகாரம் பவரை வைத்து கொண்டு மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவங்க கூட்டணியில் பல குளறுபடிகள். 2026ம் ஆண்டு கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com