ஒரு வருசம் ஆச்சு தி.மு.க. அமைச்சர்கிட்ட மனு தந்து ... வெடித்த வி.சி.க. எம்.பி.!

வி.சி.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் சமூக ஊடகப் பதிவு
வி.சி.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் சமூக ஊடகப் பதிவு
Published on

அரசு அதிகாரிகள் பணி உயர்வு விவகாரத்தில் அமைச்சரிடம் மனு அளித்தும் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என தி.மு.க. கூட்டணிக் கட்சியான வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

தன் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் இதை வெளியிட்டுள்ளார். 

பதவி இறக்கப்படும் எஸ்.சி. அரசு அதிகாரிகள் எனும் தலைப்பில், 

”பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைப்பிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த ஒருவர், உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி, எஸ்.சி. அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் கீழிறக்கம் செய்கிறது தமிழ்நாடு அரசு. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என கடந்த ஆண்டு இதே நாளில் அமைச்சர் கயல்விழியிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த அநீதி இதுவரை நிறுத்தப்படவில்லை.

வி.சி.க. தலைவர் திருமாவளவனும் நானும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம்.” என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார்.  

அண்மையில், ”வேளாண்துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் எஸ்சி வகுப்பினர் என்றும் அறிகிறேன்.” எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த ஆண்டு இதே நாளில் விழுப்புரத்தில் அமைச்சரிடம் தான் மனு அளித்தபோது எடுத்த படத்தையும் ரவிக்குமார் வெளியிட்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com