வி.சி.க.வுக்கு பானை, ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி- சின்னம் ஒதுக்கீடு!

வி.சி.க. பானை சின்னம்
வி.சி.க. பானை சின்னம்
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அக்கட்சி கோரியபடி பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த முறை தி.மு.க. அணியில் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் சுயேச்சையாகவும் வி.சி.க. போட்டியிட்டது. 

இந்த முறை, அங்கீகாரம் பெற்ற கட்சி அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் வி.சி.க., தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. இதையொட்டி தி.மு.க. சின்னத்தில் அல்லாமல் தங்களின் சுய சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்து, ஏற்கெனவே சுயேச்சையாகப் போட்டியிட்ட பானை சின்னத்தைப் பெற விண்ணப்பம் செய்தது. 

ஆனால், தேர்தல் ஆணையம் அதை ஒதுக்கமுடியாது எனக் கூறிவிட்டது. அதை எதிர்த்து வி.சி.க. தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கியபோது, வி.சி.க.வுக்கு பானை சின்னம் கிடைத்துள்ளது.  

இதைப்போல, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.வுக்கு அதன் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதையடுத்து, ம.தி.மு.க. கோரிய தீப்பெட்டி சின்னம் கிடைத்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com