திருச்சியில் துரை போட்டி; பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி- வைகோ

துரை வைகோ
துரை வைகோ
Published on

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் வைகோ சற்றுமுன்னர் ஊடகத்தினரிடம் இதைத் தெரிவித்தார். 

ம.தி.மு.க. தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் வைகோ கூறினார். 

தேர்தல் ஆணையத்தில் பம்பரம் சின்னம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், அதன் முடிவு வெற்றியாகவோ தோல்வியாகவோ இருக்கலாம்; எது வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்; பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். 

இதனிடையே ம.தி.மு.க. தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம்  இன்று 18.03.2024 மாலை 3.00 மணி அளவில் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் தாயகத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ,பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொகையா மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் மறுமலர்ச்சி திமுக திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறது.

இத்தேர்தலில் மறுமலர்ச்சி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து கழக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களை கழக வேட்பாளராக போட்டியிடச் செய்வது என்று ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Andhimazhai
www.andhimazhai.com