வைகோ
வைகோ

புலிகள் தடை- மனுக் கொடுத்த வைகோ!

Published on

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பாய விசாரணையில், 
தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க
புதுதில்லி தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மனுதாக்கல்செய்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை14.05.2024 அன்று, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அதன்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து 05.06.2024 அன்று ஒன்றிய அரசு  மீண்டும் அடுத்த அரசாணை வெளிட்டது.

அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்கக்கூடாது?  விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 23.07.2024 மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், வைகோ சார்பில், ”விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்திய ஒன்றியத்தில், தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என நேற்றுமுன்தினம் தீர்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், ஆகஸ்டு 7 ஆம் தேதிக்கு விசாரணையை ஓத்திவைத்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com