பொறியியல் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான (பி.இ., பி.டெக்.) சேர்க்கை தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அதன் இயக்குநர் வீர ராகவராவ் இதை வெளியிட்டார்.
கலந்தாய்வு முறையிலான சேர்க்கை வரும் 22ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % பிரிவினரில் ஒதுக்கீடு சேர்க்கை நடைபெறும்.
அடுத்ததாக, முன்னாள் படைவீரர் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் உட்பட்டோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டுச் சேர்க்கையும்
பின்னர், தொழில்முறைக் (வொகேசனல்) கல்விப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கையும் நடத்தப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஜூலை 29 முதல் செப்டம்பர் 3ஆம் தேதிவரை பொது சேர்க்கை நடைபெறும்; அடுத்தகட்டமாக தொடங்கும் துணைச்சேர்க்கை 11ஆம் தேதி சேர்க்கை நிறைவடையும் என்றும் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 65 பேர் என்றும் அவர் கூறினார்.