விரைவில் துணை முதல்வராகிறார் உதயநிதி! - அமைச்சர் பொன்முடி தகவல்!

Ministers Ponmudy Udhayanidhi Stalin
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் - பொன்முடி
Published on

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிக விரைவில் பதவியேற்பார் என உயர்கலவித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் , நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேவேளையில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களுக்கு சீனியர்கள் வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக நிலவிவரும் சூழலில், விழுப்புரம் மாவட்டம் வலையாம்பட்டு கிராமத்தில் திமுக கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,”தமிழகத்தை வழிநடத்தக்கூடிய இளைஞர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார். இளைஞர்களை வழிநடத்தக் கூடிய ஆற்றல் கொண்டவர். பெரியார், அண்ணா, கலைஞர் கொளையில் வளர்ந்தவர்.” என்றார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசனும் ஏற்கனவே இதே கருத்தை தெரிவித்து இருந்தார். அதே சமயம் அமைச்சர் துரைமுருகனோ இதுதொடர்பான கேள்விக்கு பதில் தெரியாது எனக் கூறிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழா மாநாட்டுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com