தமிழ்நாடு நாள்- நடிகர் விஜய் சொன்னது என்ன?

actor vijay
நடிகர் விஜய்
Published on

ஆளும் தி.மு.க. தமிழ்நாடு உருவான நாளைப் புறக்கணித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் தமிழ்நாடு நாளைக் கொண்டாடிவருகின்றன. புதியதாகக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், இன்றைய நாளில் தன் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், ”1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

”தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவுகூருவோம்.” என்றும்

“தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.” என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com