ராகுல் காந்தியைத் தரம்தாழ்ந்து பேசுவதா?- எச்.ராஜாவுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்!

Selvaperunthagai, MLA, TNCC president
செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்
Published on

”தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் இராகுல்காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பைக் குறிப்பிட்டு மிகமிக இழிவாக தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

”இராகுல்காந்தியை தேசத்துரோகி என்று அவர் குற்றம் சாட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுகாலம் சிறைவாசம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தியைப் பற்றி இழித்து பேசுவதற்கு எச். ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பா.ஜ.க.வினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.” என்றும் சாடியுள்ளார், செல்வம்.

தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாக கருத்துகளை கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளை பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் எச். ராஜா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், அவரின் பேச்சைக் கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படியும் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com