திருவள்ளுவர்
திருவள்ளுவர்

காவியில் திருவள்ளுவர்- ஆளுநருக்கு காங்கிரஸ் கண்டனம்!

Published on

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசுவதாக ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகைதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:

“ அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது. அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது.” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com