தி.மு.க.வுடன் நட த்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது! – கே.எஸ். அழகிரி பேட்டி

தி.மு.க.வுடன் நட த்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது! – கே.எஸ். அழகிரி பேட்டி
Published on

தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தொகுதிப் பங்கீடு குழுவைச் சேர்ந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதேசமயம் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் இடம்பெற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்ளு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவுடன் நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பேச்சுவார்த்தை விவரங்களை வெளியே தெரிவிப்பதில்லை. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது, பா.ஜ.க., அ.தி.மு.க.வை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து பேசினோம். தி.மு.க.விடம் நாங்கள் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து முகுல் வாஸ்னிக் தெரிவித்ததாவது:

“நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம். திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com