தமிழ் நாடு
5 பேர் பலி வேதனை அளிக்கிறது! - கனிமொழி
மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.