அமெரிக்கா செல்லும் முதல்வர்… என்ன காரணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. திருவண்ணாமலை, கரூர் மாவட்டங்களில் மினி டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்படும், சிறு, குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 60 சதவீத பணிகள் தொடங்கியிருக்கின்றன. இனி அடுத்த கட்டமாக முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழக அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. அமெரிக்காவில் பெருநிறுவன முதலீட்டாளர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, முதலீடுகளை ஈர்ப்பதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com