தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்! – முதலமைச்சர் அறிவிப்பு

110ன் படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை.
110ன் படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை.
Published on

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் விதி 110ன் படி முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்போது மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு புகழாரம் சூட்டினார்.

அதன்பின்னர் பேசிய அவர், தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் இனி எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம், மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com