தமிழ் நாடு
மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் இணைந்து நடத்தப்பட்ட ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலையில் உள்ளது.
முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ள 161 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி 117 தொகுதிகளும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும், ஜன சேனா கட்சி 15 தொகுதிகளிலும் பா.ஜ.க. 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளவற்றில், பா.ஜ.க. 58 தொகுதிகளிலும், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலா ஒரு தொகுதியிலும், சுயேச்சைகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.