தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் வழங்கப்படும் வருடாந்தர விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதற்கான ஆணையை தமிழ் வளர்ச்சி- செய்தித் துறைச் செயலாளர் இல. சுப்பிரமணியன் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் தமிழில் வெளியிடப்பட்ட சிறந்த நூல்களைத் தெரிவுசெய்வதற்கான குழு, கடந்த ஜனவரி 11ஆம் தேதியன்று கூடி, விருதுக்குரிய பட்டியலை முடிவுசெய்தது என்றும் அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி விருதின் வகைப்பாடு - எழுத்தாளர் - நூல் விவரம் பின்வருமாறு:
மரபுக் கவிதை – பேரா கரு. நாகராசன் (இராமானுச மாமுனிவர் காவியம்), புதுக்கவிதை – முனைவர் இரா. சின்னசாமி (புண் உமிழ் குருதி), புதினம் – சிவகுமார் முத்தய்யா (குரவை), சிறுகதை – அன்பழகன் (எ) பாரதி வசந்தன் (பெரிய வாய்க்கா தெரு), நாடகம் (உரைநடை, கவிதை) – ஞா. மாணிக்கவாசகன் (புகழ் அமுதம் 20022), சிறுவர் இலக்கியம் - சு. கந்தசுவாமி (சிறார் நலம் தேடு), திறனாய்வு – பவள சங்கரி திருநாவுக்கரசு (தமிழ்த்தேன் துளிகள்), மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி இலக்கணம் – ஆ. மணி (தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு கூற்று), பிறமொழிகளிலிருது தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் – ஆயிஷா நடராசன் (மழலையர் கல்வி), நுண்கலகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) – பா. திருநாவுக்கரசு (திரை இசையில் தமிழிசை), அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித்தமிழ் – இரா. கு. ஆல்துரை (நெலிகோலுபடகு தமிழ் – ஆங்கில அகராதி), பயண இலக்கியம் - கு. வெங்கடேசன் (இதய கவர்ந்த இலங்கை), வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு – முனைவர் மருதுமோகன் (சிவாஜி கணேசன்), நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு – க. சுபாஷிணி (ராஜராஜனின் கொடை), கணிதவியல் – அ. சோழராஜன் (நமது சூரியக்குடும்பமும் விண்வெளி ஆராய்ச்சி வரலாறும்), பொறியியல், தொழில்நுட்பவியல் – ஓ. ஹென்றி ஃபிரான்சிஸ் (மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுயவேலை வாய்ப்புகள்), மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் – பேரா. சொ. சொ. மீ. சுந்தரம் (தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்), சட்டவியல், அரசியல் – சந்திரிகா சுப்ரமண்யன் (ஊடகச் சட்டங்கள்), பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் (இயற்கையொடு இயைந்த அறிவியல்), மருந்தியல், உடலியல், நலவியல் – டாக்டர் எஸ். நடராஜன் (முதியோர் நலம்), தமிழ் மத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) – கே.எஸ்.சண்முகம் (வளரும் தரும் நெல்லி), சமயம், ஆன்மிகம், அளவையியல் – ஏ.பி. ஜனகராஜா (ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில்), கல்வியியல், உளவியல் – பிரகாஷ் ராஜகோபால் (சூப்பர் குழந்தை), வேளாண்மையியல், கால்நடையியல் – முனைவர் லோகநாதசாமி (சென்னை வருவாய் தரும் செம்மறியாடு), சுற்றுப்புறவியல் – சந்திரசேகரன் (கழுகுகளின் காடு), கணினியியல் – சிவலிங்கம் (தமிழ்மொழி- சி), நாட்டுப்புறவியல் – ஆ. பழனியப்பன் (மண்சார் வாழ்வியல்), வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் – ஃபாசில் ஃப்ரீமேன் அலி (எண்ணப் பூக்கள்), இதழியல், தகவல் தொடர்பு – ச. செந்தில்குமார் (கலகக்கார கலைஞர்கள்), பிற சிறப்பு வெளியீடுகள் – மதுமிதா (தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்), விளையாட்டு – சே. லோகராஜ் (கால்களின் தவம் தேக்வாண்டோ), மகளிர் இலக்கியம் – பிருந்தா சேது (கதவு திறந்ததும் கடல்), தமிழர் வாழ்வியல் – பேரா. சீனிவாசன் (புலம் பெயர் தமிழர்கள் வாழ்வு – இருப்பு - படைப்பு)
அறிவிக்கப்பட்டுள்ள நூலாசிரியர்களுக்கு பரிசுத்தொகையாக தலா 30,000 ரூபாயும், பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நூல்களை பதிப்பித்துள்ள பதிப்பகத்தாருக்கு ரூ. 10,000 பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.