கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.247 கோடி!

sugarcane
கரும்பு
Published on

கடந்த ஆண்டு அரவைப் பருவத்திற்கு  சர்க்கரை  ஆலைகளுக்குப் பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 247  கோடி வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு, 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான - ஆதாய விலையான ரூ.2919.75 என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. 

மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215-ஐயும் சேர்த்து, டன் ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.3134.75 பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247.00 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com