‘கிலோ 500 ரூபாய்’ - வரலாறு காணாத அளவு பூண்டின் விலை உயர்வு!

‘கிலோ 500 ரூபாய்’ - வரலாறு காணாத அளவு பூண்டின் விலை உயர்வு!
Published on

சென்னையில் பூண்டின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படும் நிலையில், வெளிசந்தையில் உள்ள கடை களில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உற்பத்தியாளர்களிடம் இருந்து பூண்டுவை அதிகளவில் கொள்முதல் செய்து, பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பூண்டின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 10 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பூண்டு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com