4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

மழை
மழை
Published on

தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதனால் இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com