ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அதனால், ஜனவரி 22 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து மகாராஷ்டிர, டெல்லி, பாண்டிச்சேரி உடபட பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் சுவற்றில் பாஜக சின்னம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது ஐந்து இடத்திலாவது பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை வரைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் வரைந்து வருகின்றனர்.

அரசு நிகழ்ச்சிகளில் பிரதமரும் முதல்வரும் கலந்துகொள்வது இயல்புதான். அதை கூட்டணி என பார்க்க முடியாது என்றார்.

மேலும் ராமர் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com