தேசிய திரைப்பட விருதுகள் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அருமையாக கருத்து தெரிவித்துள்ளார் என்று வழங்கப்படாதது குறித்து நடிகர் விசிக தலைவர் தொல்.திருமாவளன் பாராட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் திரைப்படங்களுக்கு தேசிய விருது சர்ச்சை தொடர்பாகவும் பல கேள்விகள் எழுப்பட்டன.
அதற்கு பதிலளித்த அவர், “தி காஷ்மீர் பைல்ஸ் படம் முரண்பாடனது. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் என்ன சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள், கலைத்துறை அவர்கள் எப்படி கையாள பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த படத்திற்கு விருது கொடுத்ததை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.” என்றார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் தேசிய திரைப்பட நடுவர் குழுவில் இருந்தாலும், அவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றவர்,
“ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களின் கருத்து சேர்ந்த எழுத்துக்கோ, படைப்புக்கோ, திரைப்படத்துக்கோ விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. யார் ஆட்சியில் இருந்தாலும் அதுதான் நடக்கிறது. பாஜக அரசு திரைப்படத்துறையையும் தங்களுக்கான கருவியாக பயன்படுத்த நினைக்கிறது. அவர்கள் விரும்புகிற வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு திரைத்துறையை பயன்படுத்த நினைக்கிறது. இது விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது” என்றும் கூறினார்.
ஜெய்பீம் படத்துக்கு விருது அளிக்கப்படவில்லை என்கிற விமர்சனம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு மிக அருமையான பதில் சொல்லியிருக்கார். காந்தியைக் கொன்றவர்கள், அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்குவார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்திருக்கிறார். அதையே நான் வழிமொழிகிறேன்.” என்றார்.
ஜெய்பீம் படம், வெகுஜன மக்களை ஈர்த்த திரைப்படம். நடிப்பு, இசை என எல்லாவற்றுக்காகவும் பாராட்டைப் பெற்ற படம். என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.