தமிழ் நாடு
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவான பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி பரவலாகப் பேசப்படுகிறது. திரைப்படப் பாடலுக்காக பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பலரும் பணியாற்றுகையில் இசையமைப்பாளரே உரிமை கொண்டாடமுடியுமா என்பது நீதிமன்றத்தின் கேள்வி.
இந்த நிலையில், இளையராஜாவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்ட கவிஞர் வைரமுத்து, திடீரென தன் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு கவிதையைப் பதிந்துள்ளார்.
அதில், இசையோ மொழியோ சுயமென்று ஏதும் இல்லை; எல்லாமே கூட்டியக்கம்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்துவின் இந்தக் கவிதையைப் பற்றி ஆதரவாகவும் எதிர்த்தும் வலைவாசிகள் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.