பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப சி.பி.எம். வலியுறுத்தல்!

கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
Published on

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதோடு, ஆசிரியர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:

“கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் நாளை (10.06.2024) திறக்கப்படவுள்ளன. விடுமுறையை முடித்து பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்கி முன்னேற்றமடைய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீண்ட விடுமுறைக்கு பிறகு திறக்கப்படும் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், பள்ளிப்பேருந்துகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிகளின் படி முறையாக பராமரிக்கப்படுவதையும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுவதையும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்திடவும், உரிய காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com