அதிர்ச்சி... தண்டவாளத்தில் போல்ட்டுகள் அகற்றம்- என்ஐஏ விசாரணையில் தகவல்!

kavaraippettai train accident
கவரைப்பேட்டை இரயில் விபத்து
Published on

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் நேற்று நிகழ்ந்த இரயில் விபத்துக்கான காரணங்கள் குறித்து பலதரப்பு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இதில்,தேசியப் புலனாய்வு அமைப்பு- என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, பாதை மாறும் இடத்தில் உள்ள தண்டவாளங்கள் இணைப்பு அமைப்பில் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர். 

அந்த இடத்தில் சுத்தியால் அடித்ததைப் போல போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்றும் இதைப் போல ஏற்கெனவே பொன்னேரி பகுதியில் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்றும் தே.பு.மு. அதிகாரிகள் கூறினர். 

கடந்த செப்டம்பரில் 16, 21 ஆகிய தேதிகளிலும் அதற்கு முன்னர் ஜூலையில் 26ஆம் தேதி ஒரு முறையும் அண்மையில் போல்ட்டுகள் கழற்றப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

எனவே, இது சதிச்செயலாக இருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com