நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் 'செரியபானி' பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நாகையில் இருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6,500, 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து ஒரு நபருக்கு ரூ. 7.670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 1:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30மணிக்கு நாகை வந்தடையும். இந்த பயணத்திற்கு பாஸ்போர்ட் இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இரண்டு முறை கப்பல் போக்குவரத்து சேவைக்கான தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.