எவ்ளோ நாள் ஆச்சு... மீண்டும் சென்னை வேளச்சேரிவரை மாடி ரயில் இயக்கம்!

chennai mrts train
சென்னை எம்.ஆர்.டி.எஸ். மாடி ரயில்
Published on

விரிவாக்கப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை கடற்கரை- வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். மாடி ரயில் சேவை 15 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையம், எழும்பூர் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தது. இதற்காக, கடற்கரை நிலையத்திலிருந்து புறப்பட்டுவந்த மாடி ரயில் சேவை, சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்டது.

நான்காவது வழித்தடத்துக்காக கோட்டை, பூங்கா நகர் தொடர்வண்டி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிவடைந்தன. அதை அடுத்து, மாடி ரயில் சேவை மீண்டும் பழையபடி கடற்கரை நிலையத்திலிருந்து இன்று தொடங்கப்பட்டது.

ஆனால், மறு அறிவிப்பு வரும்வரை பூங்காநகர் நிலையத்தில் மட்டும் இந்த வண்டி நிற்காது என்றும் இரயில்வே துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com