நீதிபதி மதுரைக்கு மாறுதல்- உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கு ரத்துகளை மீள்விசாரணை செய்துவந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை கிளைக்கு மாறுதல் ஆகியுள்ளார். சுழற்சி முறையிலான இந்த மாறுதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்துவந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் இனி விசாரிப்பார்.

முன்னதாக, கடந்த மாதம் 10ஆம் தேதியன்று, அமைச்சர் பொன்முடி-அவரின் குடும்பத்தார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ரத்துசெய்யப்பட்டதை மறுவிசாரணை செய்யப் போவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். பரபரப்பை ஏற்படுத்திய அந்த அறிவிப்பு, ஊடக விவாதப் பொருளாகவும் மாறியது.

நீதிபதிகளின் வழக்கத்துக்கு மாறாக, இதற்கு விளக்கம் அளித்த நீதிபதி ஆ.வெ., முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட பலரின் வழக்குகளிலும் இதே நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரிவித்தார். மேலும், தலைமை நீதிபதியின் அனுமதியுடன்தான் பொன்முடி வழக்கை விசாரிப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பின்னணியில், அவர் மதுரைக் கிளைக்கு நேற்று வழக்கமான சுற்று மாறுதல் செய்யப்பட்டார். அதையடுத்து, அமைச்சர் பொன்முடி தரப்பில் தங்கள் மீதான வழக்கை மீள்விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com