கலைஞர் மருத்துவமனையில் சம்பள நிலுவை- அமைச்சர் மா.சு. விளக்கம்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னையில் அண்மையில் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை ஆனது. இது குறித்து பல தரப்பினரும் அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். ஆனாலும் சம்பளம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நாளை சம்பளம் வழங்கப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது நிர்வாக காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் ஆகியது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை எண் 176இன் படி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் அனைவருக்கும் நாளை சம்பளம் வழங்கப்படும்.” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com