கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம்- நா.த.க. வேட்பாளர் கைது!

Sivaraman
சிவராமன்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மோசடி செய்ததுடன் பாலியல் கொடுமையிலும் ஈடுபட்டார், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சிவராமன். இதனால் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். கைதுசெய்யப்பட்ட சிவராமன் தற்கொலை செய்துகொண்டதும் அவரின் தந்தை விபத்தில் மரணம் அடைந்ததும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த மாவட்டத்தில் பல இடங்களில் இப்படி போலியாக என்சிசி முகாம்கள் நடத்தி, ஒரு கும்பல் தொடர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்த வழக்கில் மையமான சிவராமனுக்கு உதவியதாக அக்கட்சியின் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கருணாகரன் தேடப்பட்டுவந்தார். தலைமறைவாக இருந்த அவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இறந்துபோன சிவராமனின் அலுவலகத்தில் முக்கியமான ஆதாரமாகக் கருதப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை எரித்து அழித்துவிட்டார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

கைதான கருணாகரன் 2021 தேர்தலில் பர்கூர் வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்றாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.   

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com