“தலைவர் பதவி வெங்காயம் மாதிரி” - அண்ணாமலை அதிரடி பதில்!

அண்ணாமலை
அண்ணாமலை
Published on

“மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது” என்று பாஜக மாநிலை தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக பல விஷங்களைக் கடந்து வந்துள்ளது. நான் களத்திலிருக்கிறேன். கடந்த 60 நாள்களாக தினந்தோறும் 25 ஆயிரம் பேரை பார்த்தேன். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவரும் இந்தளவிற்கு மக்களை சந்தித்ததில்லை.

யாருக்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது. கட்சியில் பொறுப்பில் இருக்கக்கூடிய நேரத்தில் கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம். கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும்.

மாநிலத் தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. பதவியைத் தூக்கிப் போட்டு வந்தவன் நான். இதை விட அதிகமாக 10 ,15 மடங்கு பவரை பார்த்தவன் நான்.

நான் நிம்மதியாக என் வாழ்க்கையை வாழ்கிறேன். எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன். நேற்று தோட்டத்திற்குப் போனேன். ஆடு மாட்டை பார்த்தேன் எனக்கு என ஒரு தனி உலகம் இருக்கிறது. அந்த குட்டி உலகத்தில் நான் வாழ்கிறேன்.

அரசியலில் என் கருத்துக்களை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டேன். மாற்றி பேசிதான் இருக்கவேண்டும் என்றால் இருக்கப் போவது இல்லை. என்னுடைய தனி உலகத்தில் ஒரு சூழலில் அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். மோடிக்காக அரசியலுக்கு வந்தேன். அண்ணாமலையிடம் அட்ஜெஸ்மண்ட் பாலிடிக்ஸ் எப்போதுமே கிடையாது.

ஒரு கருத்தை எடுத்தால் உடும்பு பிடி மாதிரி பிடிப்பேன். இன்றைக்கு அந்த கருத்துக்கு நேரம் இல்லை என்றால் 5 வருடம் கழித்து அந்த கருத்துக்கான நேரம் வரத்தான் போகிறது. என்னை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனக்காக வேண்டும் ஆனால் சிலர் பேர் மாறலாம்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com