விஜய்க்கு பட்டால்தான் தெரியும்! – கார்த்தி சிதம்பரம்

Karthi Chidambaram
கார்த்தி சிதம்பரம்
Published on

தனிக்கட்சி நடத்துவது குறித்து விஜயக்கு பட்டால்தான் தெரியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபனா உட்பட நூற்றுக்கணக்கான கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் கொடியையும் பாடலையும் வெளியிட்ட விஜய், கொடி வடிவமைப்பு குறித்து விரைவில் விளக்கம் அளிப்பேன் என்றார்.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ’தனிக்கட்சி நடத்துவது குறித்து நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும். கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் அல்ல, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். விஜய் கொடியை அறிமுகம் செய்ததை வைத்தும் மட்டும் எதையும் கூற முடியாது.' என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com