கன்னியாகுமரிக்கு பிரதமர் வருவது விதிமீறலா? – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது விதிமீறலா? என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள்கள் தியானம் செய்ய உள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் தியானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அதற்கு அனுமதி கோரப்படவில்லை. மேலும் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி வராது. தனியார் பராமரிப்பில் உள்ள இடத்திற்கு தனிப்பட்ட நிகழ்விற்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத்தேவையில்லை. தேர்தல் விதிமுறைப்படி பரப்புரை மேற்கொண்டாலோ அல்லது கூட்டம் கூட்டினாலோ நடவடிக்கை எடுக்கலாம்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com