அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு, பொதுப்பிரிவினருக்கான மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு, 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என 2020இல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும் கிராமப் புறங்கள், தொலைதூர பகுதிகள், மலைப் பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதால் இது சம்பந்தமான அரசின் கொள்கை முடிவில் எந்த தவறும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com