வாக்கிங்... வணக்கம்...கிடைத்தது வேலை!

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்த செயல் ஒன்று அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்னை கிண்டியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, காகிதம் எடுத்துப் பிழைப்பவர் அமைச்சரைப் பார்த்து வணக்கம் கூறியுள்ளார். உடனே அவரை அழைத்து விசாரித்துள்ளார் அமைச்சர். அந்த நபர் திருச்சியைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் ராஜா என்பதும் தெரியவந்தது.

வேலையின்றி இருந்த அவர், காகிதம் எடுக்கும் பணி செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

அவரின் வறுமையை அறிந்த அமைச்சர், அவரை தன்னுடைய வாகனத்திலே வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரை குளிக்க சொல்லி உணவு உடை வழங்கியிருக்கிறார்.

மேலும், ராஜாவை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ 12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனையின் தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள நிலையில், அமைச்சரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com