தமிழ்நாட்டில் இதுவரை அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24, 884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024 -25ஆம் கல்வி ஆண்டில் இதுவரை எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2, 38, 623 மாணவர்களும், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 61, 142 மாணவர்களும் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 23, 370 மாணவர்களும், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1,749 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது முன்கூட்டியே நடத்தப்பட்டு வருகிறது.