தமிழ் நாடு
துணைமுதலமைச்சர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவைக் கூட்டங்களிலும்கூட வீட்டில் அணியக்கூடிய டிசர்ட் வகைகளை அணிந்துவருகிறார். மேலும், அதில் தி.மு.க.வின் கொடி சின்னத்தில் அதன் இளைஞரணி அடையாளத்தையும் பொறித்துள்ளார்.
அரசு பொது நிகழ்ச்சிகளில் அவர் இப்படி ஆடை அணிந்துவருவது அரசமைப்புச் சட்டப் பதவிக்கு அழகு அல்ல என்று அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.
இதனிடையே, அவர் இப்படி பொது நிகழ்வுகளில் கட்சி சின்னம் நிறத்துடன் கூடிய உடையை அணிந்துவரக்கூடாது எனத் தடைவிதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதை இன்று விசாரித்த நீதிமன்றம், இதற்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.