ஹீட் ஸ்ட்ரோக்… கட்டுமானப் பணியாளர் மரணம்!

ராஜீவ் காந்தி மருத்துவமனை
ராஜீவ் காந்தி மருத்துவமனை
Published on

சென்னையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட வேலு என்பவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 104 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட வேலு என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேல்மலையனூரைச் சேர்ந்த வேலு சென்னையில் கட்டுமான பணி செய்து வந்தவர். நேற்று வழக்கம் போல் அவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடும் வெயில் காரணமாக கால் மரத்துப்போன உணர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com