ஹிதேந்திரன் நினைவு நாள்- உறுப்புதானம் செய்வோருக்கு இனி அரசு மரியாதை!

இறந்தும்வாழும் ஹிதேந்திரன்
இறந்தும்வாழும் ஹிதேந்திரன்
Published on

செங்கல்பட்டும் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஹிதேந்திரனின் நினைவு நாள், உடலுறுப்புதான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிதேந்திரனின் 15ஆவது நினைவு நாளான இன்று, தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ள விவரம்:

”உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com