ஆளுநர் விருந்து திருப்பம்... முதல்வர் பங்கேற்பு!

ஆளுநர் மாளிகை விருந்து
ஆளுநர் மாளிகை விருந்துகோப்புப்படம்
Published on

ஆளுநரின் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

குடியரசு தினம், சுதந்திர தின விழாவின்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி தமிழக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்பார்கள் என நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இதில் திமுக என்ன முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “திமுக சார்பில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கப்போவதில்லை. அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் இன்று மாலை தெரிவிப்பார்.” என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுதந்திர விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், ஆளுநர் விருந்தில் அரசு பங்கேற்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: “தேநீர் விருந்து பங்கேற்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று நாங்கள் பங்கேற்கிறோம்.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com