முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் காலமானார்!

ஆர். எம். வீரப்பன்
ஆர். எம். வீரப்பன்
Published on

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது (98)

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர் 1953இல் எம்.ஜி.ஆர் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் பொறுப்பாளராக ஆர். எம். வீரப்பன் நியமிக்கப்பட்டர். பிற்காலத்தில் சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார்.

சட்டமன்ற உறுப்பினர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். அ.தி.மு.க.விலிருந்து 1995ஆம் ஆண்டு நீக்கப்பட்ட ஆர். எம். வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து செயல்பட்டார்.

பின்னர், வயது மூப்பு காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பன், மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்குத் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com