8 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு ரூ. 5 கோடி!

8 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு ரூ. 5 கோடி!
Published on

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலையில் தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

  • கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

  • கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ. 17 கோடி நிதி ஒதுக்கீடு.

  • அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

  • தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

  • 2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

  • மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

  • கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

  • 2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

  • சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

  • பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை  பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

  • 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

  • 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

  • ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com