ஜெயிலில் போய் களி திங்கப்போறே என்று யாரும் சொல்ல முடியாது. மாமியார் வீடு என்று சொல்லப்படுவதுதான் இனி நிஜமாகிறது எனலாமா?
என்ன ஆச்சு?
கடந்த தமிழக அரசின் வரவு செலவுக்கணக்குகூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது போல, தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம் சிக்கன் குழம்பு, மாலை சூடான சுண்டல், டீ, இரவு சப்பாத்தி சென்னா மசாலா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ கிளாஸ் சிறைவாசிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அசைவமும் பி கிளாஸ் சிறைவாசிகளுக்கு வாரத்தில் இரு நாட்கள் அசைவமும் வழங்கப்படும்.
பி கிளாஸ் சிறைவாசிகளுக்கு ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உனவு செலவு. 96 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏ கிளாஸ் சிறைவாசிகளுக்கான செலவு 146 ரூபாயில் இருந்து 208 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னை புழல் சிறையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.