ப்ளூ ஃபிலிம் பார்த்த பாஜக தலைவர்கள் - காயத்ரி ரகுராம் கேள்வி!

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்
Published on

பறக்கும் முத்தம் தந்ததாக ராகுல் காந்தியைக் கண்டிக்கும் பாஜக பெண்கள், ப்ளூ ஃபிலிம் பார்த்து பிடிபட்ட தம் கட்சி தலைவர்கள் பற்றி ஏன் கேட்கவில்லை என காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பெண் எம்பிகளுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

பெண் எம்பிகளுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து, அவையில் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பெண் எம்பிக்கள் மனு அளித்தனர்.

இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில நிர்வாகியான காயத்ரி ரகுராம், ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

அதில், ”பாராளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் முன்னிலையில் உணர்ச்சியால் முத்தமிடுவது பிரச்சனையாக இருக்கும் போது இருவரையும் கண்டிக்க வேண்டும்.” என்று கூறியுள்ள அவர், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், ”ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவர் தனது உரையை முடித்ததும் மேடையில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் சிக்னேச்சர் ஸ்டைல் ஃப்ளையிங் கிஸ் பொதுமக்களுக்கு அன்பின் அடையாளமாக வழங்கினார். ஆனால் பாஜக தலைவர்கள் சட்டசபையில் ப்ளு ஃபிலிம் பார்த்துப் பிடிபட்டுள்ளனர். பாஜக பெண் தலைவர்களிடம் இருந்து ஏன் குரல் கொடுக்கவில்லை? பல பொதுக்கூட்டங்களில் பல பாஜக தலைவர்கள் பகிரங்கமாகப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை?” என சரமாரியாக கேள்விகளை அடுக்கியிருக்கிறார், காயத்ரி.

logo
Andhimazhai
www.andhimazhai.com